ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையில் பயணிக்கும் உழைக்கும் பத்திரிகையாளர்கள் அனைவரின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், அவர் துயருறும் காலங்களில் தோள் கொடுத்து ஆறுதல் தரவும் தன்னலம் கருதா முன்னோடி பத்திரிகையாளர்கள் சிலரால் முதலில் ‘மெட்ராஸ் பிரஸ் கிளப்’ (MADRAS PRESS CLUB) என்ற பெயரில் கடந்த 1972 ஆம் ஆண்டு உருவான இச்சங்கமானது, நிருபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் – 1975-ன் கீழ் 1997 ஆம் ஆண்டு தற்போதுள்ள படி, ‘சென்னை பிரஸ் கிளப்’ (CHENNAI PRESS CLUB) என பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தது.  

ஆனால், காலப்போக்கில் அதன் நோக்கங்கள் சிதைந்து சுயநலமிகள் சிலரின் கரைபடிந்த கரங்களில் எப்போது அது சிக்கியதோ அன்று முதல் சங்கத்தின் பெயரால் வசூல் மோசடிகளும் அரங்கேறி, ‘கேள்வி கேட்க யாருமில்லை’ என்ற நிலையில், பதிவுத்துறை சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய தேர்தலையும் கூட 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தாமலும், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என யாருமே இல்லாமல் இணைச்செயலாளர் என்ற பெயரில் ஒருவரும் அவருடன் மூவரும், ஆகமொத்தம் குறிப்பிட்ட 4 நபர்கள் தொடர் மோசடியில் இன்று வரை ஈடுபட்டு வரும் நேரத்தில் பதிவுத்துறை ஆவணங்களிலும் காலாவதியானது சென்னை பிரஸ் கிளப் (CHENNAI PRESS CLUB). 

இது, ஊடகத்துறை சார்ந்த அனைவரையுமே கொந்தளிக்க வைத்த நிலையில்தான், பூனைக்கு மணி கட்டும் பணியானது துவக்கப்பட்டு, ஏற்கனவே சென்னை பிரஸ் கிளப் (CHENNAI PRESS CLUB) உறுப்பினர்களாக இருந்த நேர்மையான பத்திரிகையாளர்கள் பலரின் வழி காட்டுதல்களோடும், பல மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்போடும் கடந்த 2021ஆம் ஆண்டு புதிய பதிவெண் கொண்டு (Reg.No: 425/2021) மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட சென்னை பிரஸ் கிளப் (CHENNAI PRESS CLUB) அன்று முதல் இன்றுவரை தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வழிகாட்டுதல்களின் படி, இச்சங்கம் துவக்கப்பட்ட நோக்கம் சிதையாமல் பத்திரிகையாளர்களின் பேரமைப்பாக தமிழகமெங்கும் உள்ள அனைத்து ஊடகத்தினரின் உரிமைக்காகவும் தலைநகரான சென்னையில் இருந்து குரல் கொடுத்து வருகிறது. 

மேலும், பத்திரிகையாளர்கள் ஒன்று கூடவும், மற்றவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தவும் சென்னை சேப்பாக்கம் பகுதியில் பொதுப் பணித்துறையால் சென்னை பிரஸ் கிளப் (CHENNAI PRESS CLUB)-பிற்கு சொற்ப வாடகைக்கு வழங்கப்பட்ட இடமும், அதில், தனியார் குழுமம் ஒன்று கட்டிக் கொடுத்த கட்டடமும் இன்னமும் கூட அந்த மோசடிப் பேர்வழிகள் நால்வரின் தன்னலப் பிடிக்குள் சிக்கி இருப்பதை மீட்டெடுத்து, அவர்களையும், அவர்கள் மூலம் அரசின் அனுமதியின்றி முறைகேடாக உள்வாடகைக்கு இருப்பவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு, அக்கட்டடத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை பத்திரிகையாளர்களின் நலனுக்காக செலவிடும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளது சென்னை பிரஸ் கிளப் (CHENNAI PRESS CLUB). 

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

நிர்வாகிகள்

Mr. A.SELVARAJ

PRESIDENT

Senior journalist from one of the nation’s leading English daily.

Well renowned columnist, Crime explorer who has been digging out the scenes behind every crime and thus popularly known as ‘CRIME’ SELVARAJ

Mr. C.VIMALESWARAN

GENERAL SECRETARY

4th generation senior journalist. 

Pivotal person behind the renewed CHENNAI PRESS CLUB.

Founder of Peranmai Prints and Media (OPC) Pvt Ltd, Chennai