சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பை பரிசாக வழங்கும் விழா மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் நிர்வாகிகள் கூட்டம் ;
CHENNAI PRESS CLUB / சென்னை பத்திரிகையாளர் மன்றம் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் திரு ச.விமலேஷ்வரன், தலைமையில் கடந்த 24.04.2022ம் தேதி ஞாயிறு அன்று கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கிராண்ட் ஓட்டல் முதல் தளத்தில் காலை 10:30 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் திரு அ.செல்வராஜ், அவர்கள் முன்னிலையில் புதிதாக சங்கத்தில் உறுப்பினராக இணைந்த பலருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கப்பட்டது. மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு சொந்தமான கட்டிடத்தை மீட்பது தொடர்பான, முக்கியத்துவம் வாய்ந்த பல விசயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு நேரில் வரமுடியாத மூத்த பத்திரிகையாளர்கள் பலர் காணொளி காட்சி (Video Call) மூலம் கலந்துக் கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து உரை நிகழ்த்தினர்.
மூத்த பத்திரிகையாளர்கள் திரு ந.பா.சேதுராமன் மற்றும் திரு.சிந்து பாஸ்கர், ஆகியோர் கெளரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.
CHENNAI PRESS CLUB சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் துணை தலைவர் திரு.செல்லப்பாண்டி, பொருளாளர் திரு.கோவிந்தராஜன், மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அ.பிரகாஷ் அவர்களும் (செயற்குழு உறுப்பினர்களான)
திரு.ஹமீது, திரு.ராஜன்பாபு, திரு.வினோத்கண்ணன், திரு.அர்விந்த், திரு.அமானுல்லா, திரு.ராஜ்குமார், திரு.மோனிஷ்வரன், திரு.சீனிவாசராவ், மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்ற பழைய மற்றும் புதிய உறுப்பினர்கள், மேலும் கூட்டத்திற்கு பார்வையாளர்களாக பலர் வந்து கலந்துக் கொண்டனர்.
கூட்டத்திற்கு கலந்துக் கொண்ட அனைவருக்கும் துணை தலைவர் திரு.செல்லப்பாண்டி, அவர்கள் நன்றி தெரிவித்தார்.