உறுப்பினர் சேர்க்கை

தேதி: 14.03.2022.

CHENNAI PRESS CLUB /சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது..! விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் !

பத்திரிகையாளர்களின் பேரமைப்பான

CHENNAI PRESS CLUB / சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடந்த பல ஆண்டு காலமாக சுயநலம் கொண்ட சிலரின் ஆதிக்கத்தின் கீழ் பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்கு உள்ளாகி இருந்ததை பலரும் அறிவோம். மேலும் நீதிமன்ற வழக்கை காரணமாக கூறி நீண்டகாலமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படாமல் இருந்ததுடன், சங்க விதிமுறைப்படி முறையாக ஆண்டறிக்கை – கணக்கு வழக்குகள் காட்டப்படாத காரணத்தால் கலைக்கப்பட்ட சங்கமாக அரசால் அறிவிக்கப்பட்ட தகவலைக் கூட மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் பல ஆண்டுகளாக அந்த சுயநலக்கும்பல் ஏமாற்றி வந்ததையும் அனைவரும் அறிவீர்கள்.

இந்நிலையில் தற்போது தகுதி மிக்க மூத்த பத்திரிகையாளர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் துடிப்பான இளம் பத்திரிகையாளர்களால், CHENNAI PRESS CLUB / சென்னை பத்திரிகையாளர் மன்றம் அரசு பதிவு சட்ட விதிமுறைப்படி, முறையாக பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்: 425/2021) மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் அனைவரும் அறிவீர்கள்.

CHENNAI PRESS CLUB /சென்னை பத்திரிகையாளர் மன்றம் – 2022-ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள பத்திரிகையாளர்கள் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து அனுப்பி வைத்த பின்னர், உறுப்பினர் சேர்க்கை பரிசீலனைக் குழுவின் ஒப்புதலுடன் தகுதியான பத்திரிகையாளர்களுக்கு CHENNAI PRESS CLUB / சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அடையாள அட்டை வழங்கப்படும்.

சென்னையிலிருந்து வெளியாகும் நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் – செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றும், செய்தியாளர்கள், ( ரிப்போர்ட்டர்ஸ் ), துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்), போட்டோகிராபர்கள், கேமராமேன்கள், ப்ரூப் ரீடர்ஸ், லேஅவுட் ஆர்டிஸ்ட் உள்ளிட்ட உழைக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் சென்னைக்கு வெளியே உள்ள தமிழக மாவட்டங்களை சேர்ந்த மற்றும் வெளி மாநிலங்களில் பணியாற்றும் தமிழக பத்திரிகையாளர்களும் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 31 ஆம் தேதி வரை புதிய உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

உறுப்பினராக சேர விரும்பும் புதியவர்கள் தாங்கள் பணியாற்றும் பத்திரிகை நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டை நகல் மேலும் அரசு அங்கீகாரம் (அக்ரீடேஷன்) மற்றும் (பிரஸ் பாஸ்) அடையாள நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டையின் நகலுடன் ஓராண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை கட்டணமாக (ரூ,280/-) மட்டும் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

கைபேசி – 7299898883

இணையம் : www.chennaipressclub.in

மின்னஞ்சல் – chennaipressclub2021@gmail.com